Kovilpatti Kavinger Neelamani

கோவில்பட்டி நீலமணி 

கோவில்பட்டி நீலமணி. பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் நடத்திய குயில் பத்திரிகை மூலமாக தென்னகத்தில் கவிஞராக தென்னக மக்களிடம் அறிமுகமானார்.02.07.1941 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் சங்கரலிங்கம்பிள்ளை -
இலக்குமியம்மாள். ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இளம் வயதில் இவர் எழுதிய குயில் சொன்ன கதை மூலமாக பாவேந்தரின் அறிமுகம் கிடைத்தது. பாவேந்தரும் இவரின் கவிதை எழுதும் ஆற்றலைக் கண்டு வியந்து தமது கைப்பட வாழ்த்துமடல் ஒன்று எழுதிக் கொடுத்தார். பள்ளியிறுதி படிப்பு வரைக்கும் பயின்ற இவர், பின்னர் பண்டிதர்கள் போல் தாமும் கவிதைகள் இயற்றத் தொடங்கினார்.  இவர் கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தில் அஞ்சலகத் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.


குயில், காவியப் பாவை, கண்ணதாசன், வண்ணச்சிறகு, தீபம், கவிதைபோன்ற பல்வேறு இதழ்களிலும் கவிதைகள் எழுதினார்.  இவரின் தமிழார்வம்மா.பொ. சிவஞானம் அவர்களின் நட்புக் கிடைக்க வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தது. பாண்டிச்சேரி அரசாங்கம் நடத்திய பாரதியாரின் நூற்றாண்டு விழாவில் இவரது கவிதை இயற்றும் ஆற்றலைக் கண்டு பாரதி பட்டயமும், சான்றும் வழங்கியது. 

பனிரெண்டாம் வகுப்பு சிறப்புத் தமிழில் இவர் 
தமிழ் அன்னையை ஊஞ்சலில் ஆட வைத்து மகிழ்ந்த ஆடாய் ஊஞ்சல் பொன்னுஞ்சல்என்னும் பாடலை, பாடப்  புத்தகத்தில் வைத்து கெளரவித்தது. அதனைத் தொடர்ந்து இவர் என் பாடல் இனிக்கும், என் கவிதைகள் என மரபுக் கவிதை நூல்களை எழுதினார்.

காலப் போக்கில் இயற்கையின் அழகுகளையும், தனி மனிதர் உரிமைகளையும் பாடிக் கொண்டிருந்த இவரது எண்ணம் இறைவடிவமாக மாறத் தொடங்கியது.

ஆம் கவியரசு கண்ணதாசன் அவர்களைப் போல் இறைவன் மீது பாடல்கள் இயற்றத் தொடங்கினார். கண்ணதாசன், கண்ணனை மையமாகக் கொண்டு பாடல் இயற்றியது போல் இவர் தமிழ்க் கடவுள் முருகன் மீது பாடல்கள் இயற்றத் தொடங்கினார்.


திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் போற்றுவது போல் ஒரு முகம் ஆறு திருக் கரங்களும் கொண்டு எழுந்தருளியிருக்கும் 
கழுகுமலை முருகன் மீது  பாடல்கள் பாடத் தொடங்கினார்.  இவர் இயற்றிய தெய்வமலர்கள், கழுகுமலை கந்தகவசம், கழுகுமலை கந்தனலங்காரம், கழுகுமலை சந்தத் தமிழ்,
கழுகுமலை திருப்புகழ் அந்தாதி, கழுகுமலை மணிமாலை.

கோவில்பட்டி காவல்தெய்வம் --செண்பகவல்லி அருள்மாலை, செண்பகவல்லி நூற்றந்தாதி என பல்வேறு பாடல்களை எழுதியுள்ளார்.
இவரது கவிதைத் திறன் நாளடைவில் கவியரசு கண்ணதாசன்  அவர்களை சென்றடைந்தது. நாளடைவில் கவியரசுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினையும் பெற்றார்.

இவரது பாடல்களில் குடிகொண்டு
ஆட்சிப் புரிந்த தமிழின் சொல்லழகைக் கண்ட
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சுவாமிகள் அவர்கள்:-
இனிய அன்பர் கோவில்பட்டி நீலமணி அவர்கள் ஒரு நல்ல கவிஞர். தமிழார்வலர் இவர் இயற்றிய கழுகுமலை கந்த கவசம் என்ற நூலை படிக்கும் இனிய வாய்ப்புக் கிடைத்தது. கவிதை இனிய தமிழிலில் எளிய நடையில் அமைந்துள்ளது. ஒரு நல்ல பக்தி நூலைப் படித்த மன நிறைவு, மகிழ்ச்சி. இத்தகு படைப்புகள் பலவற்றைக் கவிஞர் தருவாராக வாழ்த்துகள். - தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சுவாமிகள்.

ஜகத்குரு. காஞ்சிப் பெரியவர் அவர்கள் ஆசீர்வாதம்:
காவடிச் சிந்து கண்டு மகிழ்ந்த கழுகுமலைப் பெருமான் இப்பொழுது கவசம் கண்டு மகிழ்வதையறிந்து சந்தோசிக்கிறோம். கவசம் யாத்துள்ள கோவில்பட்டி நீலமணிக்குக் கழுகுமலைப் பெருமான் அருள் பூர்ணமாகக்கிட்டி மேலும் பல நூல்கள் யாத்திடும் பெரும்பேறு கிட்ட ஆசீர்வதிக்கிறோம் - ஜகத்குரு. காஞ்சிப் பெரியவர் அவர்கள் ஆசீர்வாதம் வழங்கினார்.

திருமுக கிருபானந்தவாரியார் சுவாமிகள்.
மூவேந்தர்களின் தனிப் பெருந் தலைவனாம் -முருகப் பெருமான் ஒரு திருமுகமும் ஆறு திருக்கரங்களும் கொண்டு எங்கும் இல்லாத புதுமையுடன் கழுகுமலையில் எழுந்தருளியிருக்கிறான். இப் பெருமானை இடையறாது சிந்தித்து வந்தித்து வாழ்த்துகின்ற அடியவர் திரு. நீலமணி என்பவர் இவர் கழுகுமலை கந்தவேள் மீது கவசம்பாடித் தமிழ் மக்களுக்கு உதவுகின்றார். இதனை ஏனோரும் ஓதி உய்வார்களாக - என திருமுக கிருபானந்தவாரியார் சுவாமிகள்.

கவியரசு கண்ணதாசன்:
அற்புதப் பாக்கள் கொண்ட
அருட்தெய்வமலர்கள் கண்டேன்.
கற்பனை வளத் திறன்மிக்க
கடவுட்பா இசைத்தார் பாடல்.
விற்பனர் இவரை அந்த
வியத்தகும் தெய்வம் காக்கும்
பொற்புகழ் நீலவண்ணன்
பொலிக பல்லாண்டு காலம்.

நீலமணி நெஞ்சத்துள் நிறைந்த நண்பர் 
நிலைகோவில் பட்டிநகர்
பிறந்த தோழர்.
கோலமிகும் கவியாத்த
கொள்கைச் செம்மல்
குணத்தாலே பிறர் மனத்தைக்
கொள்ளை கொண்டார்.
ஆலமரம் போல்நின்று
தழைத்து வாழ்க.
அழியாத பாடல்பல
இயற்றி வாழ்க.
சாலஇவர் பெயர் இந்தத்
தரணி எங்கும்
சரிதத்தில் இடம்பெறவே
தலைவன் செய்க.

என கவியரசு கண்ணதாசன் அவர்களும் தம் கைபட வாழ்த்துமடல் எழுதியுள்ளார்கள்.

இவர் எழுதிய தமிழ்க் கவிதைகள் பலவற்றை காலஞ்சென்ற இசை மாமேதைமதுரைசோமு அவர்கள் எண்ணற்ற மேடைகளில் பாடியுள்ளார். அவரைத் தொடர்ந்து கழுகுமலை ஏ. கந்தசாமி அவர்களும் இவரது பாடல்களை பல்வேறு மேடைகளில் பாடியுள்ளார். இவர் எழுதிய அண்ணாமலை மன்றம் சாட்சி சொல்லும் என்ற பாடலை கழுகுமலை ஏ. கந்தசாமி அவர்கள் அண்ணாமலை மன்றத்தில் பாட, அந்தப் பாடல் அன்றைய நாளிதழ்களில் அண்ணாமலை மன்றத்தின் தேசியகீதம் போல இனிமையாக ஒலித்தது என சிறப்புக் கட்டுரையாக வெளியிட்டது.

பின்னர் இவர் எழுதிய தெய்வமலர்கள் என்னும் நூலில் இடம்பெற்ற
உன்னாலே என் பாடல் இனிக்கின்றது என்னும் இனிய பாடலானது
சென்னைத் தொலைக் காட்சி நிலையத்தில் பிரபல திரையுலக பாடகர்
பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள் பாடினார். இந்தப் பாடலுக்கு உபேந்திரகுமார் இசையமைத்திருந்தார். பிரபல திரைப்பட இசையமைப்பாளர் அரவிந்த் சித்தார்த்அவர்களும் கழுகுமலை முருகன் பாடல்களை ஒலிநாடாவாக வெளியிட முன்வந்தார்.


 1960 இல் இவரது நண்பர்களான தமிழ்க்கனல், முல்லை நெல்லையப்பன், பொ.மா.ராசாமணிபோன்றவர்களுடன் இணைந்து தென்னகத்தில் முதல் பாட்டுக் கவியரங்கத்தைஅரங்கேற்றினார்கள்.


கி,வா.ஜகநாதன்:
அன்புமிக்க நீலமணி. அவர்களுக்கு வணக்கம். நலம்.
தாங்கள் 18.09.1992 அன்று எழுதிய கடிதம் கிடைத்தது.
எனக்குத் திரு. ராசா அண்ணாமலை செட்டியார் அவர்கள் விருது கிடைக்க இருப்பதைப் பாராட்டி எழுதியதற்கு நன்றி.

எல்லாம் முருகன் திருவருளும், என் ஆசிரியப் பிரானுடைய ஆசியும் தரும் நலன்கள் என்று நம்புகிறேன். இசைப்பாட்டில் விநாயகன் ‘றன’ புகழும் வேற்கை இளமுருகன் பெரும்புகழும் இசைத்துப் பாடி
நசைப் பாட்டைப் பலபடியாகக் காட்டி
நண்ண வைத்தான் உயர் கோவிற்பட்டி வாழ்வோன்
திசைப் பாரெல்லாம் புகழ இந்தப் பாக்கள்
கீர்த்திப் பெறும் அன்பர்கள் போற்றிப் பாட
அசைப்பரிய கிளர்ச்சியுடன் ஓங்க வேண்டும்
ஆசிரியர் வாழ்கவென வாழ்த்துகின்றேன்.

      - கி,வா.ஜகநாதன்,  காந்தமலை, 2, நார்ட்டன்        முதல்தெரு, சென்னை 28

நன்றி மு.வலவனின், இலக்கியப் புரவலர் யார்? எவர்?

புத்தாண்டில் புதுமை புனையும் கிராமம்... (ஜமீன்தேவர்குளம்)










கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் - பாரதி கலை இலக்கிய மன்றம் அமைப்பை நடத்தி வருபவரும், வழக்கறிஞரும் எமது ஆசிரியர் மற்றும் இனிய நண்பருமான
திருமிகு. பாரதிமுருகன் அவர்களும்,
திருச்செந்தூரைச் சேர்ந்த மக்கள் வழக்கறிஞர் நண்பர்
திருமிகு. இராமசாமி அவர்களும், கோவில்பட்டியைச் சேர்ந்த
தேசிய நல்லாசிரியர் விருதைப் பெற்ற பள்ளி தலைமையாசிரியர்
சகோதரி திருமதி. விநாயகசுந்தரி அவர்களும் அவர்களது
வாழ்க்கைத் துணைவரும், நவீன நெற்றிக்கண் நிருபருமான
இனிய நண்பர் திருமிகு. ராஜன் ஆகியோருடன் நாமும்
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கிடையே
அமைந்து கோவில்பட்டி தாலுகாவைச் சேர்ந்த
ஜமீன்தேவர் குளத்திற்கு சென்று வந்தோம்...

நாம் கண்டு பரவசமடைந்த நிகழ்ச்சியை அங்கிருந்து ....
விஜய் தொலைக் காட்சி நீயா நானா புகழ்
இனிய நண்பர் திருமிகு. கோபிநாத் அவர்களுடனும்,
இந்தியாடுடே கிரேட் டிசைனரும் நமது இனிய நண்பருமான
திருமிகு. நானா அவர்களுடனும் எமது கைபேசியில் தொடர்பு  கொண்டு
நமது மகிழ்ச்சியையும் நமது கருத்தையும் பகிர்ந்து கொண்டோம்.
தற்பொழுது பேஸ்புக் வாயிலாக நண்பர்களாகிய தங்களோடு
இந்த இனிய புத்தாண்டு தருணத்தில் பகிர்ந்து கொள்வதில்
மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

சுயநலங்கள் ஊறிப் போய்கொண்டிருக்கும் இன்றைய
காலகட்டத்தில் மக்களாகவே தங்கள் கிராமத்தை
இன்றைய அறிவியல் மற்றும் தமது அறிவுத் துணையுடன்
முன்னிலைப்படுத்த முன்னேற்றமடையச் செய்திருப்பதை
நாம் நேரில்சென்று வியந்து பார்த்தோம்.

இந்தியாவின் இதயம் கிராமம் என்ற மகாத்மா காந்தியடி
களின் அர்த்தமுள்ள வார்த்தைக்கு அர்த்தத்தைக் கொடுத்துக்
கொண்டிருக்கும் கிராமம்.

மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் இன்றைய அரசியல், தங்களுக்கும் தங்களது கிராமத்திற்கும் தேவையில்லை என்பதை ஆணித்தரமாக அடித்துச் சொல்வது போல் இந்த கிராமத்தில்
அரசியல் கொடிகள் இல்லை. ஆயினும் அவரவர் விரும்பினால் அவரவருக்குரிய கட்சிகளுக்கு ஓட்டுப்போடலாம் என்பதையும்
இவர்கள் ஒதுக்கவில்லை.

வள்ளுவர் மன்றங்கள் எத்தனை தோன்றினாலும், எத்தனை நூல்கள் வடிக்கப்படாலும் செவி வழியே விழுகின்ற செய்திகளுக்கும்,
கருத்துகளுக்கும் இருக்கும் மரியாதையே தனிதான்.
ஆம் அவைகள் எளிதில் நம் மனசுக்குள் குடியேறி விடுகின்றன.
புரியவில்லையா...
தெருவெங்கும் ஒலிப்பெருக்கிகள்....ஒருமணிநேரத்திற்கு
ஒருமுறை உயிர்பெற்று ஒவ்வொரு குறளோடு அந்த
மணி நேரத்தையும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தெருவெங்கும் பட்டுக் கம்பங்கள் விரிக்கப்பட்டது போன்ற
சிமெண்ட் ரோடுகள்... இவை மட்டும்தானா என்ற நம் வியப்பிற்கிடையே...

ஒரு திருட்டுக் கும்பலை போலீசாருக்குப் பிடித்துக்
கொடுத்து விட்டேன் என்ற கர்வத்தோடு...
நவீன காமிராக்கள் ஆங்காங்கே அமர்ந்து நம்மை கண்
காணித்துக் கொண்டிருக்கின்றன.

கிராமத்தைச் சுற்றி நடைபோட்டோம். ஒவ்வொரு தெருவும் படு சுத்தமாக வைக்கப்பட்டிருக்கின்றன. வீடுகளும் பளிச்சென்றே இருக்கின்றன.
என்ன ஒரு தயக்கம்.
கிராமத்திற்கு அழகான அடையாளங்களான குடிசைகள் வெகு சிலவே
இருக்கின்றன. மாட்டுச் சானங்கள், குப்பைகள் இல்லவே இல்லை.

பிரதமர் மோடி அவர்களின் நாட்டைச் சுத்தப்படுத்துவோம்
என்ற கருத்து இவர்களை இன்னும் வந்தடையவில்லை
என்பதை இவர்களது பேச்சினூடே தெரிந்து கொண்டோம்.
பிரதமர்மோடி அவர்களுக்கும், அவரது அரசு சாதனையாளர்களுக்கும் இவர்களைப் பற்றிய கருத்துக்களை பதிவு செய்து
அனுப்பி வைத்துள்ளோம்.

திருமதி.கமலா பாலகிருஷ்ணன் அவர்கள்தான் ஊராட்சியின்
தலைவியாக உள்ளார். பசுமை வீடுகள் என்ற பெயரில்
இவர்கள் கட்டிக் கொடுத்துள்ள வீடுகள் இவர்களது
முன்னேற்றத்துக்கு சாட்சியம் கூறுகின்றன.

ஊரணி, குளங்கள் இவர்களது ஊரை இன்னமும்
தத்தெடுத்துக் கொண்டு அழகு செய்கின்றன.

மகாகவி பாரதியின் ஜாதிகள் இல்லையடி பாப்பாஎன்ற வார்த்தைக்களுக்கு உயிர் கொடுப்பது போல்இங்குள்ள மக்கள் தங்களோடு வாழ்கின்ற பிற ஜாதியினரை மனிதர்களாகப் பார்ப்பதும், சகோதரத்துவத்தைக் கடைப்பிடிப்பதுமே இக் கிராமத்திற்கு மேலும் அழகு சேர்க்கிறது. மேலும் இக்கிராமத்தில் யார் வீட்டிலாவது ஏதாவது ஒரு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்றால் இவ்வூரில் உள்ள தாழ்ப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான் உணவு தயாரிக்கின்றனர் என்றார் திருமதி. கமலா அவர்கள்.

இதுபோன்று ஒவ்வொரு கிராமமும் மாறுமேயானால்
இந்தியா ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும்
புத்தாண்டு தினத்தைக் கொண்டாடும் நாடாகவே மாறும்
என்பதில் சந்தேகமில்லை.



என்றும் இனிய கிராபிக்ஸ் பா. கண்ணன்.









 

Latest news

Latest news - test Latest news - test Latest news - test Latest news - test Latest news - test Latest news - test Latest news - test Latest news - test Latest news - test Latest news - test Latest news - test Latest news - test Latest news - test

Our Roll

Our Roll - test Our Roll - test Our Roll - test Our Roll - test Our Roll - test Our Roll - test Our Roll - test Our Roll - test Our Roll - test Our Roll - test Our Roll - test Our Roll - test Our Roll - test Our Roll - test Our Roll - test

About

About Us - test About Us - test About Us - test About Us - test About Us - test About Us - test About Us - test About Us - test About Us - test About Us - test About Us - test About Us - test About Us - test About Us - test About Us - test About Us - test About Us - test About Us - test