புத்தாண்டில் புதுமை புனையும் கிராமம்... (ஜமீன்தேவர்குளம்)










கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் - பாரதி கலை இலக்கிய மன்றம் அமைப்பை நடத்தி வருபவரும், வழக்கறிஞரும் எமது ஆசிரியர் மற்றும் இனிய நண்பருமான
திருமிகு. பாரதிமுருகன் அவர்களும்,
திருச்செந்தூரைச் சேர்ந்த மக்கள் வழக்கறிஞர் நண்பர்
திருமிகு. இராமசாமி அவர்களும், கோவில்பட்டியைச் சேர்ந்த
தேசிய நல்லாசிரியர் விருதைப் பெற்ற பள்ளி தலைமையாசிரியர்
சகோதரி திருமதி. விநாயகசுந்தரி அவர்களும் அவர்களது
வாழ்க்கைத் துணைவரும், நவீன நெற்றிக்கண் நிருபருமான
இனிய நண்பர் திருமிகு. ராஜன் ஆகியோருடன் நாமும்
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கிடையே
அமைந்து கோவில்பட்டி தாலுகாவைச் சேர்ந்த
ஜமீன்தேவர் குளத்திற்கு சென்று வந்தோம்...

நாம் கண்டு பரவசமடைந்த நிகழ்ச்சியை அங்கிருந்து ....
விஜய் தொலைக் காட்சி நீயா நானா புகழ்
இனிய நண்பர் திருமிகு. கோபிநாத் அவர்களுடனும்,
இந்தியாடுடே கிரேட் டிசைனரும் நமது இனிய நண்பருமான
திருமிகு. நானா அவர்களுடனும் எமது கைபேசியில் தொடர்பு  கொண்டு
நமது மகிழ்ச்சியையும் நமது கருத்தையும் பகிர்ந்து கொண்டோம்.
தற்பொழுது பேஸ்புக் வாயிலாக நண்பர்களாகிய தங்களோடு
இந்த இனிய புத்தாண்டு தருணத்தில் பகிர்ந்து கொள்வதில்
மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

சுயநலங்கள் ஊறிப் போய்கொண்டிருக்கும் இன்றைய
காலகட்டத்தில் மக்களாகவே தங்கள் கிராமத்தை
இன்றைய அறிவியல் மற்றும் தமது அறிவுத் துணையுடன்
முன்னிலைப்படுத்த முன்னேற்றமடையச் செய்திருப்பதை
நாம் நேரில்சென்று வியந்து பார்த்தோம்.

இந்தியாவின் இதயம் கிராமம் என்ற மகாத்மா காந்தியடி
களின் அர்த்தமுள்ள வார்த்தைக்கு அர்த்தத்தைக் கொடுத்துக்
கொண்டிருக்கும் கிராமம்.

மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் இன்றைய அரசியல், தங்களுக்கும் தங்களது கிராமத்திற்கும் தேவையில்லை என்பதை ஆணித்தரமாக அடித்துச் சொல்வது போல் இந்த கிராமத்தில்
அரசியல் கொடிகள் இல்லை. ஆயினும் அவரவர் விரும்பினால் அவரவருக்குரிய கட்சிகளுக்கு ஓட்டுப்போடலாம் என்பதையும்
இவர்கள் ஒதுக்கவில்லை.

வள்ளுவர் மன்றங்கள் எத்தனை தோன்றினாலும், எத்தனை நூல்கள் வடிக்கப்படாலும் செவி வழியே விழுகின்ற செய்திகளுக்கும்,
கருத்துகளுக்கும் இருக்கும் மரியாதையே தனிதான்.
ஆம் அவைகள் எளிதில் நம் மனசுக்குள் குடியேறி விடுகின்றன.
புரியவில்லையா...
தெருவெங்கும் ஒலிப்பெருக்கிகள்....ஒருமணிநேரத்திற்கு
ஒருமுறை உயிர்பெற்று ஒவ்வொரு குறளோடு அந்த
மணி நேரத்தையும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தெருவெங்கும் பட்டுக் கம்பங்கள் விரிக்கப்பட்டது போன்ற
சிமெண்ட் ரோடுகள்... இவை மட்டும்தானா என்ற நம் வியப்பிற்கிடையே...

ஒரு திருட்டுக் கும்பலை போலீசாருக்குப் பிடித்துக்
கொடுத்து விட்டேன் என்ற கர்வத்தோடு...
நவீன காமிராக்கள் ஆங்காங்கே அமர்ந்து நம்மை கண்
காணித்துக் கொண்டிருக்கின்றன.

கிராமத்தைச் சுற்றி நடைபோட்டோம். ஒவ்வொரு தெருவும் படு சுத்தமாக வைக்கப்பட்டிருக்கின்றன. வீடுகளும் பளிச்சென்றே இருக்கின்றன.
என்ன ஒரு தயக்கம்.
கிராமத்திற்கு அழகான அடையாளங்களான குடிசைகள் வெகு சிலவே
இருக்கின்றன. மாட்டுச் சானங்கள், குப்பைகள் இல்லவே இல்லை.

பிரதமர் மோடி அவர்களின் நாட்டைச் சுத்தப்படுத்துவோம்
என்ற கருத்து இவர்களை இன்னும் வந்தடையவில்லை
என்பதை இவர்களது பேச்சினூடே தெரிந்து கொண்டோம்.
பிரதமர்மோடி அவர்களுக்கும், அவரது அரசு சாதனையாளர்களுக்கும் இவர்களைப் பற்றிய கருத்துக்களை பதிவு செய்து
அனுப்பி வைத்துள்ளோம்.

திருமதி.கமலா பாலகிருஷ்ணன் அவர்கள்தான் ஊராட்சியின்
தலைவியாக உள்ளார். பசுமை வீடுகள் என்ற பெயரில்
இவர்கள் கட்டிக் கொடுத்துள்ள வீடுகள் இவர்களது
முன்னேற்றத்துக்கு சாட்சியம் கூறுகின்றன.

ஊரணி, குளங்கள் இவர்களது ஊரை இன்னமும்
தத்தெடுத்துக் கொண்டு அழகு செய்கின்றன.

மகாகவி பாரதியின் ஜாதிகள் இல்லையடி பாப்பாஎன்ற வார்த்தைக்களுக்கு உயிர் கொடுப்பது போல்இங்குள்ள மக்கள் தங்களோடு வாழ்கின்ற பிற ஜாதியினரை மனிதர்களாகப் பார்ப்பதும், சகோதரத்துவத்தைக் கடைப்பிடிப்பதுமே இக் கிராமத்திற்கு மேலும் அழகு சேர்க்கிறது. மேலும் இக்கிராமத்தில் யார் வீட்டிலாவது ஏதாவது ஒரு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்றால் இவ்வூரில் உள்ள தாழ்ப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான் உணவு தயாரிக்கின்றனர் என்றார் திருமதி. கமலா அவர்கள்.

இதுபோன்று ஒவ்வொரு கிராமமும் மாறுமேயானால்
இந்தியா ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும்
புத்தாண்டு தினத்தைக் கொண்டாடும் நாடாகவே மாறும்
என்பதில் சந்தேகமில்லை.



என்றும் இனிய கிராபிக்ஸ் பா. கண்ணன்.









 

Latest news

Latest news - test Latest news - test Latest news - test Latest news - test Latest news - test Latest news - test Latest news - test Latest news - test Latest news - test Latest news - test Latest news - test Latest news - test Latest news - test

Our Roll

Our Roll - test Our Roll - test Our Roll - test Our Roll - test Our Roll - test Our Roll - test Our Roll - test Our Roll - test Our Roll - test Our Roll - test Our Roll - test Our Roll - test Our Roll - test Our Roll - test Our Roll - test

About

About Us - test About Us - test About Us - test About Us - test About Us - test About Us - test About Us - test About Us - test About Us - test About Us - test About Us - test About Us - test About Us - test About Us - test About Us - test About Us - test About Us - test About Us - test